அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் பிரச்சனை..? ரஷ்ய தடுப்பூசிக்காக கெஞ்சும் நாடுகள்..!!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் அதிபர்கள் தடுப்பூசிக்காக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவந்துள்ளது. 

கொரோனாவிற்கு எதிரான ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகள் பல இத்தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வருகிறது. ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் 60 வயதிற்கு குறைந்த நபர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதை நிறுத்தம் செய்துள்ளார்.

எனினும் அதே தடுப்பூசியை தான் செலுத்திக்கொள்ள போவதாக தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் மெர்க்கல் மற்றும் பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மிக்ரோன் போன்ற இருவரும் தடுப்பூசிகளுக்காக ரஷ்யாவின் உதவியை கேட்டுள்ளனர். அதாவது இவர்கள் இருவரும் காணொலி காட்சி வாயிலாக ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஆலோசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சுமார் 31,000 நபர்களுக்கு இரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சேன்ஸலர் ரஷ்யா தயாரித்த தடுப்பூசி குறித்துப் புடினுடன் கலந்தாலோசித்துள்ளார். மேலும் ஜெர்மனியில் அதிகமாக பெண்களுக்குத்தான் ரத்தம் உறைதல் பிரச்சனை உண்டாகியிருக்கிறது.