ஆழ்கடலில் ஒலிம்பிக் வெற்றி கொண்டாட்டம்… புதுச்சேரி நீச்சல் வீரர்கள் அசத்தல்…!!!

புதுச்சேரியில் கடலுக்கு அடியில் 12 மீட்டர் ஆழத்திற்கு சென்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை செலுத்திய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. அந்த வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அரவிந்து என்பவர் தனது குழுவுடன் இணைந்து கடலுக்கு அடியில் 12 மீட்டர் ஆழத்திற்கு சென்று ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பதக்கம் வென்று அவர்களை பாராட்டும் விதமாக கடலின் ஆழத்திற்கு சென்று ஹாக்கி பேட், இறகுப்பந்து பேட், குத்துச்சண்டை வீரரைப் போல ஒருவர், ஈட்டி எறிபவர் போலவும், வலு தூக்குவது போலவும் கடலுக்கு அடியில் நின்று தேசிய கொடி, ஒலிம்பிக் சின்னம் வைத்து பதக்கம் வென்றவர்களுக்கு வித்தியாசமான முறையில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நீச்சல் வீரர்களின் சாகசத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.