ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஆர்த்தி… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!!

பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகை ஆர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகை ஆர்த்தி 1987 ஆம் ஆண்டு வெளியான ‘வண்ணக்கனவுகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இதன்பின் ‘அருள்’ படத்தில் நடிகை ஜோதிகாவுக்கு தோழியாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . மேலும் இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர்.

முகம் வீங்கிப்போய் அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக்பாஸ் ஆர்த்தி..  புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் - Cinemapettai

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு ஜூலியுடன் பல ரகளைகள் செய்து பிரபலமடைந்தார் . இந்நிலையில் நடிகை ஆர்த்தி கண்ணாடியின் முன் நின்று செல்பி எடுத்துள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . அதில்  ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மிக குண்டாக மாறியுள்ள ஆர்த்தியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர் .