சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி  வெளியேறிய நிலையில், பா.ஜக. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவற்றில், ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் தங்களது ஆட்சியை தாங்களே எதிர்ப்பதாக அமைந்து விடும் என்ற காரணத்தால் கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டு அவர்களையெல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தி.மு.க அரசு.

தி.மு.க ஆட்சியில் இதுவரையிலும் எடுத்த நடவடிக்கைகளை இனிமேல் எடுக்கப்போகும் செயல்திட்டங்களை, ஆளுநர் விளக்கும் போது கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தால் தி.மு.க-வை அதன் கூட்டணி கட்சியினரே எதிர்ப்பதாகத் தானே அர்த்தம்கொள்ள முடியும். ஆளுநர் அவர்களின் கருத்துக்களை, சட்டசபை குறிப்பிலிருந்து நீக்கவோ, சேர்க்கவோ தமிழக சட்டசபை சபா நாயகருக்கு அதிகார வரம்பு இருக்கிறதா…? கவர்னர் அவர்கள் பேசிய பிறகு, மரபிற்கு புறம்பாக முதல்வர் குறுக்கிட்டு பேசியதும், ஆளுநர் உரையை சட்டசபைக் குறிப்பில் எப்படி இடம்பெறவேண்டும் என வலியுறுத்துவதும் முற்றிலும் தவறானது ஆகும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.