தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்த சில வார்த்தைகளை தவிர்த்தும் தானாக சில வார்த்தைகளும் சேர்த்தும் பேசியதால் முதல்வர் ஸ்டாலின் உடனே எழுந்து ஆளுநரின் உரையை நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூற‌ உடனே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆளுநர் கோபத்தில் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு முன்பாகவே சபையை விட்டு வெளியேறி விட்டார். இதனால் தற்போது ஆளுநருக்கு ஆளும் கட்சிக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆளுநர் ரவி தஞ்சாவூரில் நடைபெறும் தொழில் முனைவோர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு நேற்று மாலை விமானத்தில் சென்றார்.

அவருக்கு மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் வரவேற்பு கொடுத்த நிலையில் திருச்சி மாவட்ட திமுக மேயர்  வரவேற்பு கொடுக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தஞ்சாவூருக்கு பெயர் சென்றுள்ள நிலையில் தஞ்சையில் உள்ள திமுக மேயரும் ஆளுநருக்கு வரவேற்பு கொடுக்க வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வழக்கமாக ஒரு இடத்திற்கு ஆளுநர் சென்றால் சம்பந்தப்பட்ட மேயர் வந்து ஆளுநரை வரவேற்பார். ஆனால் தற்போது திருச்சி மற்றும் தஞ்சையில் ஆளுநர்கள் மேயரை வரவேற்க வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆளுநரை திரும்ப பெறுவதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது