ஆளுநர் மாளிகையை நோக்கி… பேரணியாக சென்ற கனிமொழி… போலீசாரால் கைது..!!

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் ஒளி ஏந்தி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது போலீசாரின் தடையை மீறி பேரணி சென்றதாக திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *