ஆளுநர் என்ற பொறுப்பிற்கு ஆர்.என். ரவி அவமான சின்னம் என்று திமுக எம்பி வில்சன் விமர்சனம் செய்துள்ளார். எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில் திரு ஆர் என் ரவி அவர்களுக்கு தன்னிலை மறந்து விட்டதா?

தமிழக அரசையும் முதலமைச்சரவர்களையும் எதிர்முகமாக பார்க்கும் அவரது போக்கும் திமுகவுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் அவர் ஈடுபடுவதும், அரசியல் சாசனப் பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதை காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல்வாதி ஆகுவதற்கு ஆசை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.