ஆளுநர் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்?….. வெளியான புதிய தகவல்….!!!!

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அதன் பிறகு தமிழகம் திரும்பிய உடனே அவர் ஆளுநர் ரவியை சந்தித்து பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது. ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி கூறியதும் விவாதமானது.

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக மேலிட தலைவர் மிக மிக தீவிரமாக இருந்தார். அந்த இலக்கின் ஒரு பகுதி ஆளுநர் ரவி ரஜினி சந்திப்பு என்பது என்று பலரும் கூறி வந்தனர். தற்போது சில மாநிலங்களில் ஆளுநர்களின் பதவி காலியாக உள்ளது. சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை ஆளுநர் பதவியில் அமர வைக்கலாம் என்று பேசப்பட்டதாக தகவல் வெளியானது. இது விரைவில் உறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *