ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியபோது ஆளுநர் உரையுடன் தொடங்கியபோது, அவருடன் வந்த விருந்தினர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது ஆளுநர் உரையின் போது மாடத்திலிருந்து விருந்தினர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததால் பிரச்சனையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமை மீறல் தீர்மானத்தை திமுக எம்பி டிஆர்பி ராஜா கொண்டு வந்தார். இந்த சூழ்நிலையில் உரிமை மீறலுக்கான காரணங்கள் இருப்பதால் ஆய்வுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் பதிலளித்தார். இதை தொடர்ந்து ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் உரையின் போது மாடத்திலிருந்து செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததால் பிரச்சனையை உரிமையை மீறல் குழுவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த சூழ்நிலையில் உரிமை மீறலுக்கான காரணங்கள் இருப்பதால் ஆய்வுக்கான அனுப்பி இருப்பதாக சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் ஆய்ந்து அறிக்கையை தர உரிமையை மீறல் குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.