சட்டப்பேரவையில் அம்பேத்கர், பெரியார், கருணாநிதி பெயர்களை ஆளுநர் உச்சரிக்க மறுத்ததையடுத்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரையாற்றும்போது பேரவையில் இருந்து  ஆளுநர் ரவி வெளியேறினார். இந்நிலையில் ஆளுநர் ரவியை கண்டித்து, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக செல்கின்றனர். அதேபோல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆளுநரை திரும்ப வலியுறுத்தி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மற்றும் மாணவர்கள்-இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் ஆளுநருக்கு ஆதரவாக ‘ஆளுநரின் ஆளுமையே’ என போஸ்டர் பாஜகவினர் ஒட்டியுள்ளனர். இதற்கு பதிலடியாக சென்னையில் #GetOutRavi என்ற வாசகத்துடன் திமுக போஸ்டர் ஒட்டியுள்ளது.