
நாக்பூரில் 47 வயதுடைய உளவியலாளர் மருத்துவமனை மற்றும் பயிற்சி கல்லூரி நடத்தி வருகிறார். இவர் ஆலோசனை என்ற பெயரில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் முதலில் சிறுமிகளிடம் பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு அவர்களிடம் கவர்ச்சியாக பேசி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளில் 50 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் உளவியலாளரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.