ஆலயத்திற்குள் நுழைந்த நபர்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

அந்தோணியார் ஆலயத்தில் 8 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் புதிய அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் மாதா மற்றும் அந்தோணியார் சொரூபத்தின் கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆலய நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலய நிர்வாகத்தினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அந்தோணியார் மற்றும் மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 8 பவுன் சங்கிலியை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ரோஸ் கலர் பேக் போட்டபடி ஆலயத்திற்குள் சர்வசாதாரணமாக நுழைந்த மர்ம நபர் மைக் ஸ்டாண்டினால் கண்ணாடி கூண்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *