ஆற்றுப்பாலம் அருகே கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. போலீஸ் விசாரணை….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குச்சிபாளையம் ரயில்வே தண்டவாளம் அருகே தென்பெண்ணை ஆற்றுப்பாலம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்துள்ளார். அவருக்கு அருகே பசு மாடும் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் பசுமாட்டை ஒட்டிக்கொண்டு தண்டவாளத்தில் நடந்து சென்ற போது ரயில் வந்திருக்கலாம். அப்போது செய்வதறியாது அந்த நபர் பசு மாட்டை அங்கேயே விட்டுவிட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்த போது இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.