ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம்…. “தமிழகமெங்கும் ஜொலிக்கும் படத்தின் புரோமோஷன் போஸ்டர்”….!!!!!

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

முதலில் ஆர்ஜேவாக தனது கெரியரை தொடங்கி காமெடி வேடத்தில் நடித்து தற்போது ஹீரோ, இயக்குனர் என தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் கடைசியாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரே திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

தற்போது வீட்ல விசேஷம் என்ற திரைப் படத்தில் ஹீரோவாக இவர் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு சத்யராஜ் அப்பாவாகவும் ஊர்வசி அம்மாவாகவும் நடிக்கின்றார்கள். மேலும் படத்தை ஜீ ஸ்டியோஸ் தயாரிக்கின்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் ஜூன் 17-ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழு பல்வேறு விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றது. இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஆர்ஜேபாலாஜி மற்றும் அபர்ண பாலமுரளி இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என முக்கிய இடங்களில் விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் முக்கிய நகரங்களின் முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. படத்தின் பிரமோஷனுக்காக படக் குழுவினர் செய்து வருவது கோலிவுட் வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *