ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்த நிலையில் பெங்களூர் அணி 221 ரன்கள் எடுத்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் பெங்களூர் அணியின் தோல்வியை நினைத்து ஆர்சிபி ரசிகர் ஒருவர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

அவரை அருகில் நின்று கொண்டிருந்த காவலர் ஒருவர் சமாதானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் விராட் கோலிக்காகவாவது கோப்பையை வெல்ல வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் ரசிகர் அழுதது நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியிலா அல்லது வேறு எப்போதாவது நடைபெற்ற போட்டியிலா என்பது சரியாக தெரியவில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by vk (@own.___creation.___)