ஆரம்பமான இறுதிச்சடங்கு…. டக்குனு உயிருடன் எழுந்த சடலம்…. சட்டுனு அதிர்ந்த உறவினர்கள்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. உயிரிழப்புகள் அதிகரிப்பால் மயாணங்களில் சடலங்கள் வரிசையாக காத்து கிடைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக எண்ணி உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய ஆரம்பித்துள்ளனர். அப்போது திடீரென சவப்பெட்டிக்குள் இருந்து மூதாட்டி உயிருடன் எழும்பியுள்ளார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *