கடலியல் தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 60.சிவ பாலசுப்ரமணி என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருச்சி உறையூரில் பிறந்தவர். தமிழின் தொன்மையை உலகளவில் கடல் வழியாக தேடிவந்தவர் ஒரிசா பாலு. தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வெளிக் கொண்டு வந்திருக்கிறார் பாலு. சமீபமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.