ஆயிரம் விளக்கு தொகுதியில்…. திமுக வேட்பாளர் முன்னிலை…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும்.

ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அந்தவகையில் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் முன்னிலையிலும், பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு பின்னடைவிலும் இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *