மீசை வைத்த ஆம்பளையா இருந்தா., என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தது பல முனைகளிலும் கண்டனங்கள் பெற்று வரும் நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் அவரை கடுமையாக சாடியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
அந்தவகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது 7 நாள் ஷேவ் பண்ணலனா எல்லாருக்குமே மீசை வளரும். நீங்கள் எப்படி முதல்வர் ஆனீர்கள் என்று மறந்துபோய் விட்டதா?” என்று சசிகலா காலில் எடப்பாடி விழுந்த போட்டோவை உதயநிதி கையோடு கொண்டுவந்தார்.