ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது…. அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் பல்வேறு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக இப்போதிருந்தே பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அரசு பண்டிகை காலங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை‌ இயக்கும். ஆனால் சில நேரங்களில் டிக்கெட் தீர்ந்து விடுவதால் தனியார் பேருந்துகள் அதை பயன்படுத்திக் கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இது தொடர்பாக அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு தொடர் பண்டிகைகள் வர இருப்பதால் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த பண்டிகை காலங்களின் போது பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.