ஆப்கானில் சிக்கியுள்ள குடும்பம் …. கவலையில் ரஷீத் கான் …. கெவின் பீட்டர்சன் வெளிட்ட தகவல் ….!!!

ஆப்கானிஸ்தானை  தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை  நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் அங்குள்ள ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் வெளியேறும்  நோக்கத்துடன் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரஷீத் கான் இங்கிலாந்தில் தற்போது  நடந்து வரும் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார் .

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தன்னுடைய  குடும்பம் வெளியேற முடியாத  சூழலில் உள்ளதால் வீரர் ரஷீத் கான் கவலையில் இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை குறித்து நானும் ,ரஷீத் காணும் நீண்ட நேரம் உரையாடினோம். தன்னுடைய நாட்டின் நிலையை குறித்து மிகவும் வருத்தப்படும் அவர், தனது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டுவரும் முடியாத கவலையில் இருக்கிறார் “என அவர் தெரிவித்துள்ளார்.