ஆபாச வீடியோ: என் பெயரை கெடுக்காதீர்கள்…. வருத்தம் தெரிவித்த அஞ்சலி அரோரா…..!!!!!

இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி அரோரா. அண்மையில் இவர் ஆபாசமாக போஸ் கொடுத்து இருப்பது போன்ற ஒரு வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கினர். இதனிடையில் வீடியோவில் இருப்பது அஞ்சலி அரோராதானா என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஞ்சலி அரோராவிடம் ஆபாச வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது “உண்மையில் என்ன நடக்கிறது என எனக்குத் தெரியவில்லை. அந்த வீடியோவில் என் பெயரையும் புகைப்படத்தையும் வைத்து மக்களை நம்ப செய்து இருக்கின்றனர். ஏன் இப்படி ஏன் செய்கிறார்கள் என்று புரியவில்லை. வீடியோவை வெளியிட்டவர்களுக்கும் குழந்தை, குடும்பம் இருக்கும். வீடியோவை என் குடும்பத்தினரும் பார்க்கின்றனர். ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இதுபோன்ற போலியான வீடியோக்களை பதிவிட்டு என் பெயரை கெடுக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *