ஆபாச படம் காட்டி 28 பேர்… 17 வயது சிறுமி….. பதற வைக்கும் சம்பவம்…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை அவரது தந்தை மற்றும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் உட்பட 28 பேர் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சிறுமியின் தந்தை டிவியில் ஆபாச படங்களை போட்டு வற்புறுத்தி பார்க்க வைத்து வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்த பிறகு 28 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *