பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த். இவர் தமிழில் என் சகியே, மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் முத்திரை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மீது மும்பை காவல் நிலையத்தில் நடிகை ஷெர்லின் சோப்ரா ஒரு புகார் கொடுத்திருந்தார். அதாவது தன்னுடைய ஆபாச படங்களை ராக்கி சாவந்த் இணையதளத்தில் கசிய விட்டதாக அவர் புகார் கொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் ராக்கி சாவந்த் இருமுறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இதனால் ராக்கி சாவந்த் சுப்ரீம் கோர்ட்டில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனால் விரைவில் ராக்கி சாவந்த் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அவரின் முன்னாள் கணவர் ஆதில் ராக்கி சாவந்த் துபாயில் தலைமறைவாகியுள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.