ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டங்கள்: GST வரி 28 சதவீதம் ஆக அதிகரிப்பு?…. லீக்கான தகவல்….!!!!

இப்போது இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள், கேளிக்கை கூடம் போன்றவற்றுக்கு நடைமுறையில் இருந்த 18 சதவீத GST வரியை மத்திய அரசாங்கம் 28 சதவீதம் ஆக அதிகரிப்பதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில் மத்திய அரசின் GST கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, கேசினோ போன்றவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பாக முக்கியமான முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் சண்டிகரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், GST கூட்டம் நாளை (ஜூன் 28) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 29) நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டு, கேசினோ சூதாட்டம் போன்றவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க அமைச்சரவை பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிகிறது. அதே சமயத்தில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் கை மற்றும் கால்கள், குடிநீர் சுத்திகரிப்பு போன்றவற்றுக்கு ஜிஎஸ்டியை குறைப்பதற்கும் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது.

இதனிடையில் ஜிஎஸ்டி நடைமுறைபடுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு வழங்கும் இழப்பீடுகளில் மத்திய அரசின் அவகாசம் இம்மாதத்துடன் முடிவுக்கு வருவதால் இந்த ஜிஎஸ்டி இழப்பீட்டை தொடர மாநிலங்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டங்கள் வாயிலாக உயிரிழப்பு, பண இழப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறுவதை கண்டித்து ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதித்து மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.