இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது குடும்பத் தலைவரின் அனுமதியுடன் ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது. பெற்றோரின் பெயர், கணவன் (அ) மனைவி பெயர் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு உதவ இது வசதியாக இருக்கும். தற்போது ஆன்லைன் வாயிலாக ஆதாரிலுள்ள குடும்பத்தலைவர் பெயரை புதுப்பிப்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

# முதலாவதாக மை ஆதார் போர்ட்டலுக்கு செல்ல வேண்டும் (https://myaadhaar.uidai.gov.in).

# அதன்பின் அப்டேட் அட்ரஸ் டேபுக்குச் செல்ல வேண்டும்.

# தற்போது குடும்பத்தலைவரின் செல்லுபடி ஆகும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

# குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை சரிபார்த்த பின் தேவைப்படும் சான்றை பதிவேற்ற வேண்டும.

# வெற்றிகரமான ரூபாய். 50 பரிவர்த்தனைக்கு பின், உங்களுக்கு சேவை கோரிக்கை எண் அனுப்பப்படும். அத்துடன்  குடும்பத் தலைவர் முகவரி கோரிக்கை பற்றிய அலெர்டை SMS வாயிலாக பெறுவார்.

# அதன்பின் 30 தினங்களுக்குள் மை ஆதார் போர்ட்டலில் சைன்இன் செய்து கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டதும் அவை செயல்படுத்தப்படும்.