புனேவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மாணவனின் தாயார் இன்ஜினியர் எனவும் அவருடைய தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் மாணவனின் அறையை சோதனை செய்ததில் அடுக்குமாடி குடியிருப்பின் வரைபடம் ஒன்றை கண்டுபிடித்தனர்.

இதை மாணவன் அவரது கையால் வரைந்தவாறு இருந்துள்ளது. இதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து எப்படி குதிப்பது என்ற வழிமுறைகளும் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவரது தாயாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மாணவனுக்கு ஆன்லைன் கேம்களில் ஆர்வம் இருந்தது தெரியவந்தது. அவர் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகிவிட்டதாகவும் நாள் முழுவதும் அந்த அறையில் இருந்து கேம்களை விளையாடுவதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுவன் கத்தியை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் இதைப் பார்த்து அவரது தாயார் அவரை திட்டியதாகவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அன்று இரவு மாணவன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் இந்த சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.