ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்களின் கடன் வசூலிப்பு முறை தொடர்ந்து மோசமாகி கொண்டே வருகிறது. ஆன்லைனில் கடன் ஆப்கள்கடலை திருப்பி வசூலிப்பதற்கு கடன் வாங்கியவர்களை துன்புறுத்துவது மற்றும் அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பீகார் மாநிலத்தில் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கிய ஒரு விவசாயிடம் கடனை வசூலிக்க சென்ற ஏஜென்ட் அந்த விவசாயியின் கர்ப்பிணி மகள் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆன்லைன் கடன் நிறுவனங்களுக்கும் கடன் வசூலிப்பு அராஜகங்களுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது கடன் செயலிகள் மற்றும் அவர்களின் கந்துவட்டி கடன் வசூலிப்பு செயல்பாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். யாருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் ரிசர்வ் வங்கிக்கு கிடையாது .
அனைவரும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆன்லைன் கடன் செயல்களுக்கு ஏற்கனவே ரிசர்வ் வங்கி பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.நிறுவனங்கள் பொறுப்புடனும் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையிலும் நடந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.