ஆன்லைனில் ரூபாய் ஒரு லட்சம் மோசடி.. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் கிருஷ்ணா நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவி பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடிய போது வந்த ஒரு லிங்கை கிளிக் செய்துள்ளார். அதில் குறைந்த அளவு பணம் செலுத்தி டாஸ்க் செய்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனை நம்பிய மணிகண்டன் ரூ.1 லட்சத்து ஐயாயிரம் வரை அதில் செலுத்தியுள்ளார். இதனையடுத்து பணம் எதுவும் திரும்ப கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணிகண்டன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply