ஆந்திர மாநில முதல்வரின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்…!!!!!

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த அணிமிகனிபள்ளே என்ற இடத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய போது, தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் கனக நாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க இருக்கிறோம். அதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் குடிப்பள்ளியில் 77 டிஎம்சி சாந்திபுரத்தில் 3 டிஎம்சி சேமிக்க இரண்டு நீர்த்தேக்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என அவர் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த திடீர் அறிவிப்பால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் வட தமிழகத்தின் ஜீவாதாரணமான பாலாறு கர்நாடகாவின் நந்தி துர்க்கம் எனும் மலையில் உற்பத்தி ஆகின்றது. அந்த மாநிலத்தில் 93 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆந்திர மாநிலம் குப்பம் மாவட்டத்தில் நுழைந்து 33 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கின்றது. அதன் பின் தமிழக எல்லையான வாணியம்பாடி அருகே உள்ளூரில் தடம் பதிகின்றது. அங்கிருந்து வேலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு வழியாக 222 கிலோமீட்டர் பயணித்து கல்பாக்கம் அருகே வயலூரில் வங்க கடலில் சங்கமிக்கிறது வருடம் தோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் கர்நாடகா மற்றும் ஆந்திரா தலா 20 டிஎம்சி தண்ணீரிலும் தமிழகம் 40 டிஎம்சி தண்ணீர் கொள்ள வேண்டும். மேலும் ஆந்திரா கூடுதலாக நீரை சேமிக்க திட்டமிடுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.