ஆந்திராவில் இன்று மட்டும் 5,145 பேர்… விடுபடுமா ஆந்திரா?… கதறும் மக்கள்…!!!

ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை ஆந்திராவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,55,727 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 6,224 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து 7,03,208 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 46,295 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்”என்று தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *