ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆடங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சாமந்தர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தன்னுடைய மனைவி, மகள் உட்பட 2 பேருடன் சிவன் கோவிலுக்கு நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் இன்று அதிகாலை சொந்த ஊருக்கு திரும்பிய போது மேதர்மிட்லா என்ற பகுதியில் டிவைடர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி காரின் மீது பயங்கரமாக மோதியதால் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதடித்து உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 பேரின் உடல்களையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 5 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.