ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜூன் 12 நாளை நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆந்திராவின் ஒரே தலைநகரமாக அமராவதி தான் இருக்கும் எனவும் நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம், பழிவாங்கும் அரசியலை செய்யப் போவதில்லை என்று கூறினார். மேலும் மூன்று தலைநகர், நான்கு தலைநகர் என வஞ்சக செயல்களால் மக்களோடு விளையாட மாட்டோம். அதே நேரம் விசாகப்பட்டினம் மாநிலத்தின் வர்த்தக தலைநகரமாக இருக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.