ஆந்தாலஜி ‘பாவக் கதைகள்’ படம் பார்த்த தளபதி விஜய், நடிகர் சாந்தனுவிடம் போன் போட்டு பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் ,சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவ கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இந்த ஆந்தாலஜி படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது . இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சாந்தனு , காளிதாஸ் ஆகியோர் நடித்த ‘தங்கம்’ படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் காளிதாஸ் மூன்றாம் பாலினத்தவராக நடித்திருந்த இந்த படம் பார்ப்பவர்கள் மனதை உருக்கும் வண்ணம் இருந்ததாக பலரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர் .

முக்கியமாக சாந்தனுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சாந்தனு ,’பாவக் கதைகள்’ படம் பார்த்த தளபதி விஜய் தனக்கு போன் செய்ததாக கூறியுள்ளார் . அதில் விஜய் ‘இதுதான் புது சாந்தனுவா? என்னைய்யா இந்த மாதிரி நடிச்சிருக்க . நீ இப்படி எல்லாம் கூட நடிப்பியா ? என ஆச்சரியப்பட்டு சொன்னதாக சாந்தனு கூறியுள்ளார் .