சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, +2 முடித்த ஆதித்ராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிட்ஸ் பிலானி கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி சி ஏ, பி பி ஏ, பிகாம் மற்றும் நாக்பூரில் உள்ள ஐ ஐ எம் பல்கலைக்கழகத்தில் இன்டர்கிரேட்டட் மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு படித்திடவும் வாய்ப்பு பெற்று தரப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கு தகுதியுடையவர்களாவர். அதேபோல் பிளஸ் 2 வகுப்பில் 2022 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்களில் 60%, 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு உள்ளாக இருக்க வேண்டும். அதேபோல் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலமாக வழங்கப்படுகிறது. இதில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.