ஆதார்-பான் கார்டு இணைப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

வருகிற மார்ச்-31 ஆம் தேதிக்குள் ஒருவர் தன் ஆதார்-பான் எண்ணை இணைக்கவில்லையெனில், அவருடைய பான்கார்டு செயலிழந்துவிடும். ஆகவே இரண்டையும் இணைத்துவிட்டால் உங்கள் பான்கார்டு செயலிழக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆன்லைனில் பான்-ஆதார் இணைப்பது எப்படி என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

வருமான வரியின் இ-பைலிங் போர்ட்டலான https://incometaxindiaefiling.gov.in/-ஐ திறக்க வேண்டும். ஏற்கனவே பதிவுசெய்யவில்லை எனில் பதிவுசெய்யவும். உங்களது பான் எண் (நிரந்தர கணக்கு எண்) பயனர் ஐடியாக இருக்கும். தற்போது உங்கள் பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு லாக்இன் செய்ய வேண்டும். இதையடுத்து ஒரு பாப் அப் விண்டோ தோன்றும். அதில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு கேட்கப்படும். அப்படி வரவில்லை எனில் Profile Settings சென்று “Link Aadhaar” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

தற்போது PANல் உள்ளிட்ட பிறந் ததேதி மற்றும் பாலினம் விவரங்கள் இங்கே தெரியும். இந்த விவரங்களை உங்களது ஆதார் விவரங்களுடன் பொருத்த வேண்டும். இந்த விவரம் 2 ஆவணங்களிலும் பொருந்தவில்லை எனில், நீங்கள் தவறாக உள்ளதை திருத்தவேண்டும். விபரங்கள் பொருந்தினால் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு link now பொத்தானைக் கிளிக் செய்யவும். பின் ஒரு பாப்-அப் செய்தியானது தோன்றும். இது உங்களது பான்கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு உள்ளது என்பதை உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைக்க https://www.utiitsl.com/ (அ) https://www.egov-nsdl.co.in/-க்கு செல்ல வேண்டும்.