ஆதார் – பான் இணைப்பு….. இன்று இரவு 11 மணிக்குள் செஞ்சுருங்க….. இல்லனா இருமடங்கு அபராதம்….!!!!

ஆதார்-பான் எண்ணை இணைக்காவிட்டால் இருமடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதை செய்ய தவறினால் ரூபாய் 1000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை ஜுலை 1ஆம் தேதி முதல் இரு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இன்று இரவு 11.00 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் செலுத்த வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் 12 இலக்க ஆதார் எண் > 10 இலக்க பான் எண் > ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாகவும் இந்த இணைப்பை செய்ய முடியும். நீங்கள் அனுப்பும் பான் எண், ஆதாருடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விட்டால், “இந்த பான் நம்பருடன் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டுள்ளது’’ என்று செய்தி உங்களுக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *