ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் விதமாக இந்திய சிறப்பு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை ஒவ்வொருவரும் தங்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்க தங்களின் பெயரில் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இனி ஆதாரம் முகவரியை மாற்றுவதற்கு குடும்ப தலைவர் பெயரில் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டும் போதும். அது சரி இல்லை என்றால் குடும்பத் தலைவர் குறிப்பிடும் முறையில் சுயசான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். குடும்பத் தலைவரின் சம்மதத்தோடு குடியிருப்பவர்கள் இணையதளம் மூலமாக ஆதார் முகவரியை மாற்றி அமைக்கும் முறையை இந்திய தனித்து அடையாள ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கு தங்களின் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாத குடியிருப்பின் உறவினருக்கு அதாவது குழந்தைகள், கணவன் மனைவி மற்றும் பெற்றோர் இந்த புதிய முறையை பயன்படுத்தலாம். விண்ணப்பதாரருக்கும் குடும்பத் தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு அவர்களின் பெயர்கள், மதிப்பெண் சான்றிதழ்,ரேஷன் அட்டை மற்றும் திருமண சான்றிதழ் போன்ற ஆவணங்களை ஆதாரமாக சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய உறவுமுறைக்கான ஆதார ஆவணம் இல்லாத நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள குறிப்பிட்ட வடிவத்தில் குடும்ப தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சுயசான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இணையதளம் மூலமாக முகவரியை மாற்றும்போது என்ற இணையதளத்தில் இந்த தேர்வை ஒருவர் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்துவதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். கட்டணம் செலுத்திய உடன் குடும்ப தலைவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பின்னர் 30 நாட்களுக்குள் மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் குடும்ப தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும். ஒருவேளை இதனை குடும்ப தலைவர் நிராகரித்து விட்டால் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.