ஆண்ட்ரியா பிறந்தநாளுக்கு மிஷ்கின் கொடுத்த சர்ப்ரைஸ்… ‘பிசாசு -2’ ஸ்பெஷல் போஸ்டர்…!!!

நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு இயக்குனர் மிஷ்கின் ‘பிசாசு -2’ திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார்

தமிழ் திரையுலகில்  இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப் படம் வழக்கமான பேய் கதைகள் போல் இல்லாமல் காதல், சென்டிமென்ட் என உணர்வுபூர்வமான காட்சிகளால் உருவாகியிருந்தது . இந்தப் படத்தில் நாகா, ராதாரவி ,பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் இயக்குனர் மிஸ்கின் ‘பிசாசு -2’ படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினார்.

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா நடிக்கிறார் . இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையமைக்கிறார் . இந்நிலையில் நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளான இன்று இயக்குனர் மிஷ்கின் ‘பிசாசு- 2’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் . இதையடுத்து நடிகை ஆண்ட்ரியாவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.