ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்கணுமா….? திருமணமாகாத பெண்களுக்கு கருக்கலைப்பு….. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!

நடிகை பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து அறிமுகமானவர். இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்றுள்ளார். இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள பதிவில் சட்டப்படியான பாதுகாப்பான கருக்கலைப்புக்கு திருமணமாகாத பெண்கள் கூட தகுதியானவர்கள் தான். திருமணம் ஆகாத பெண்களுக்கும் கணவரை பிரிந்து வாழும் பெண்களுக்கும் கருகலைப்பு செய்ய உரிமை இருக்கிறது.

பெண்கள் கருத்தரித்த பிறகு ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்று பலவந்தப்படுத்துவதை நான் பார்த்தேன். இந்நிலையில் கருக்கலைப்பு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். திருமண உறவை காப்பாற்றிக் கொள்ளவும், பெண்கள் கருத்தரிப்பதை பார்த்திருக்கிறேன். அப்படி செய்வதால் வாழ்க்கை முழுவதும் வேதனைப்பட வேண்டியிருக்கும். பெண்கள் குழந்தை பெறுவதை தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.