ஆண்களுக்கு ஏற்ற பூசணி விதை டீ..!!

பூசணி விதை தேநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.இவை ஆண்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்..!!

புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை  பாதிக்கக்கூடிய நோய்களாகும். இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி பூசணிக்காயில் இருக்கிறது. பூசணிக்காய் ஒரு சுவையான காய் மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் அதனுடைய விதை மிகவும் மருத்துவப் தன்மை கொண்டதாக இருக்கிறது.

இந்த  விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த  விதையை கொண்டு தயாரிக்கக்கூடிய தேனீர் மிக எளிய முறையில் தயாரித்து விடலாம்.

தேவையானவை:

  • ஒரு கப் தண்ணீர்
  • ஒரு கையளவு பூசணி விதை

செய்முறை:

பூசணி விதையை நன்றாக வெயிலில் காய வைத்து, அதன் தோலை உரித்து பொடியாக்கி கொள்ளவேண்டும். பின்பு ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பூசணி விதை பொடியை சேர்த்து, 15 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். பின்பு இந்த தண்ணீர் நன்றாக ஆறியதும் வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். பூசணிவிதை தேனீர் தயாராகிவிடும்.

இந்த பூசணிவிதை தேனீர் குடிப்பதால் அதிகமாக சிறுநீர் வெளியேறும். அதனால் உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறி மேலும் அலர்ஜி நீக்கியாகவும் இது செயல்படுகிறது. தினமும் ஒரு கப் டீ என்று குடித்து வந்தால் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்து விடலாம். கொலஸ்ட்ராலை குறைத்து கொள்ளலாம் மேலும் ஆரோக்கியமுடன் வாழலாம்.