மலைப்பாம்பு ஆட்டை விழுங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பைரப்பள்ளி பகுதியில் உமா என்பவர் வசித்து வருகிறார். இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு பிடித்து விட்டது. இதனால் பாம்பிடம் இருந்து தப்பிக்க ஆடு சிறிது நேரம் போராடியது. ஆனால் ஆட்டை முழுவதும் சுற்றிக்கொண்ட பாம்பு சில மணி நேரத்தில் அதனை விழுங்கிவிட்டது.
இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த உமா மற்ற ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி சென்றார். இதற்கிடையில் மலைப்பாம்பு ஆட்டை விழுங்கியதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.