ஆட்டு ஈரல் சாப்பிடுங்கள்.. இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை நீங்கி விடும்..!!

அசைவம் சாப்பிடும் பிரியர்கள் விலை அதிகம் என்று நன்மை தரக்கூடிய ஆட்டு ஈரலை தவிர்த்து விட்டு, விலை குறைந்த பிராய்லர் கோழி வாங்கி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு எவ்வளவு தீங்கு அளிக்கிறது. அதை தவிர்த்துவிட்டு இத சாப்பிடுவோம்..!

ஈரல்  என்றால் நம்மில் யாருக்கு தான்  பிடிக்காது. அதனுடைய மென்மைக்கும், ருசிக்கும் அடிமையாகாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிலர் ஈரலை சுட்டு சாப்பிடுவார்கள், சிலர் குழம்பு வைத்து சாப்பிடுவார்கள், எதுவாக இருந்தாலும் என்ன ஈரல் தனி ருசிதான். ஆனாலும் பலருக்கும் இருக்கிற சந்தேகம் ஆட்டு ஈரல் நல்லதா.? அல்லது கோழி ஈரல் நல்லதா.? என்பதுதான்.

இன்றைக்கு அதற்கான பதிலை இந்த குறிப்பில் பார்க்கலாம்..!

ஆட்டு ஈரல் நம் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்கள் அனைத்தையும் சேமித்து வைத்து நம் உடலில் சத்து குறையும் பொழுது நம் உடலுக்கு கொடுக்க கூடிய முக்கியமான வேலை செய்கிறது.  இதில் முக்கியமான ஊட்டச்சத்துக்களும் மற்றும் அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்து இருக்கும். குறைந்த அளவில் முழுமையான சத்துக்கள் கொடுக்கக்கூடிய ஒரே அசைவம் என்றால் அது ஆட்டு ஈரல் மட்டும்தான்.

ஈரலில் இருக்கக்கூடிய சத்துக்கள்:

 •  விட்டமின் ஏ
 • விட்டமின் பி
 • விட்டமின் பி2
 • வைட்டமின் டி3
 • காப்பர்
 • ஜிங்க்
 • விட்டமின் டி
 • விட்டமின் பி5
 • புரோட்டீன்
 • பாஸ்பரஸ்
 • விட்டமின் பி6
 • இரும்புச்சத்து
 • போலிக் ஆசிட்
 • மில்லினியம்
 • மிக, மிகக் குறைந்த அளவில் கலோரி
 •  கொலஸ்ட்ரால் இருக்கும்.

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஈரல் சாப்பிடுவதால் ரத்தம் மளமளவென உடலில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். ரத்த சோகை குறைபாடு நீங்கும். அதுபோல ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும், ஈரல் ஒரு நல்ல ஒரு உணவாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய எல்லா வகையான ஊட்டச்சத்துக்கள் இவற்றில்  இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் ஈரல் சாப்பிடுவதால் உடல் சோர்வு, குடல் பலமின்மை நீங்கி, உடல் பலம் பெற்று, உடல் சுறுசுறுப்பும், புது தெம்பும் கிடைக்கும். ஈரல் அனைவருமே  தாராளமாக சாப்பிடலாம். இதில் இருக்கக்கூடிய குறை என்று சொல்லப்போனால் கொலஸ்ட்ரால் மட்டும்தான். இதற்கும் பயப்பட தேவை இல்லை. ஈரல்  கூட பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் உடனே குறைந்துவிடும்.

கோழிகளை விட ஆட்டு ஈரல் தான் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கும். அதுதான் நம் உடலுக்கு நல்லது. ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் மருத்துவர்கள்  பரிந்துரைக்கும் ஒரு  அசைவம் என்றால் அது ஈரல் மட்டும் தான்.

முக்கியமாக அசைவம் ஓட்டலில் அல்லது ரோட்டு கடையில் சாப்பிடவே கூடாது. ஏனென்றால் அட்ராக்டிவ் ஆக இருக்கவேண்டும் என்று, ஃபுட் கலர் சேர்த்து வைப்பார்கள். அது மட்டும் இல்லாமல் இரண்டு, மூன்று நாள் செய்யப்பட்ட  உணவுகளை பதப்படுவதற்கான  வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக ஊட்டச்சத்து மிக்க இந்த ஈரலை ஹோட்டலில் சாப்பிடவே கூடாது.

ஏனென்றால் பத்து நாள் வரைக்கும் ஈரலை ஸ்டோர் பண்ணி வைத்தால் கெட்டுப்போகாது. ஆனால் இதில் இருக்கும் அனைத்து  வகையான சத்துக்களும் இல்லாமல் போய்விடும். அது நம் உடலுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கும். முடிந்தவரைக்கும்  அசைவம் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிடுவது தான் நல்லது. வாரத்தில் ஒரு முறை ஈரல் சமைத்து சாப்பிடுங்கள் நம் உடலுக்கு ரொம்பவே நல்லது.