ஆடு மேய்க்க சென்ற முதியவர்கள்…. திடீரென வழிமறித்த கரடி…. அச்சத்தில் கிராம மக்கள்….!!

ஆடு மேய்க்க சென்ற 2 பேரை வழிமறித்து கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள மல்லையாபுரத்தில் மணி, ராஜப்பன் ஆகிய முதியவர்கள் வசித்து வந்துள்ளனர். ஆடு மேய்க்கும் தொழிலாளர்களான இவர்கள் வழக்கம்போல அப்பகுதியில் உள்ள சின்னமலை பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளனர். இதனையடுத்து ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் மீண்டும் ஆடுகளை அழைத்துகொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது மலைப்பகுதியில் திடீரென கரடி ஒன்று அவர்களை வழிமறித்து இருவரையும் தாக்க முயன்றது.

இந்நிலையில் கரடியை பார்த்து அதிர்ச்சியடைந்த மணி மற்றும் ராஜப்பன் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனாலும் கரடி அவர்களை விரட்டி சென்று இருவரையும் தாக்கியுள்ளது. இதனைதொடர்ந்து இவர்களின் அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று கரடியை அங்கிருந்து விரட்டியுள்ளனர். மேலும் காயமடைந்த இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *