ஆஜராக நீதிமன்றம் சென்ற இம்ரான்கான்!.. திடீர் விபத்தில் சிக்கிய காரல் பரபரப்பு..!!!

நீதிமன்றத்தில் ஆஜராக செல்லும் வழியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கிக் கொண்டது. பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர். பாகிஸ்தான் முன்னால் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது பெறப்பட்ட பரிசுகளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக தொகைக்கு விற்பனை செய்து விட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

இது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராவதற்காக வீட்டிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். அவரை பின்தொடர்ந்து பாதுகாப்பு வாகனங்களும் சென்றது. இதில் ஒரு வாகனம் விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் காயம் அடைந்தனர். மேலும் ஒரு வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது.

Leave a Reply