ஆசையாய் தனக்கு பிடித்த பணியில் சேர்ந்த மனைவி.. வீடு திரும்பியவுடன் கணவர் செய்த கொடூர செயல்..!!

பிரிட்டனில் தான் விரும்பிய பணியில் சேர்ந்த மனைவியின் கையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரிட்டனில் வசிக்கும் இளம்பெண் Niamh Brett(28). இவரது கணவர் ஆடம் மில்லர் (30). இந்நிலையில் Niamh தான் மிகவும் விரும்பிய ஆம்புலன்ஸ் சேவை பணி கிடைத்தவுடன், உற்சாகமாக முகநூலில் தான் சீருடையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதனால் ஆடம் மிகுந்த கோபமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Niamhமிடம்  ஆம்புலன்ஸ் பணியில் எதற்காக சேர்ந்தாய்? வீட்டிற்கு கொரோனாவை அழைத்து வரப்போகிறாயா? குழந்தைக்கு நோய் வர செய்யப்போகிறாய் என்றெல்லாம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் Niamh வீட்டிற்கு வந்தவுடன் அவரை தாக்கி கையை உடைத்ததுடன் நீ இனிமேல் பணிக்கு எப்படி போவாய்? என்று கூறி இரண்டு மாதங்கள் வரை அவரை பணிக்கு போகாதபடி செய்துள்ளார். முதலில் அந்த பெண் அனைவரிடமும் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததாக கூறியிருக்கிறார்.

கை எலும்பில் முறிவு ஏற்பட்டு, பிளேட் வைக்கப்பட்டு, ஸ்குரூ பொருந்திய காயங்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு காவல்துறையினரிடம் அந்த ஆளை நான் சந்திக்காமலேயே இருந்திருக்கலாம். என் வாழ்வையே நாசம் செய்துவிட்டார் என்று அழுது புலம்பியுள்ளார். தற்போது ஆடம் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜூன் மாதத்தில் தண்டனை வழங்கப்படும்.