ஆசிரியைக்கு “I LOVE U” சொல்லி டார்ச்சர்…. மாணவர்களின் தொடர் அட்டூழியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியை பார்த்து மாணவர்கள் சில பேர் “I LOVE U” சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வீடியோக்கள் வெளியான நிலையில், மாணவர்கள் மீது ஆசிரியை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அம்மாநிலத்தின் மீரட் நகரில் இன்டர்மீடியட் இருபாலர் கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் ஒருவருக்கு மாணவர்கள் சில பேர் சென்ற சில தினங்களாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதாவது, ஆசிரியை பள்ளிக்கு போகும் வழியிலும், வீடு திரும்பும் போதும் அவர்கள் பல முறை ஆபாசமான கருத்துக்களைக் கூறிவந்தனர்.

மேலும் ஆசிரியையை ஒருமையில் அழைப்பதும், அவரது அனுமதியின்றி வீடியோக்கள் எடுப்பதும் தொடர் கதையாகி இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியை அவ்வப்போது எச்சரிக்கை செய்து வந்துள்ளார். எனினும் மாணவர்கள் இதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து அதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்களின் அட்டகாசம் அத்துமீறி இருக்கிறது. அதாவது மாணவர்கள் ஆசிரியையை பார்த்து “I LOVE U” என கூறியுள்ளனர்.

இதுபற்றி மாணவர்களின் பெற்றோரிடம் புகாரளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வகுப்பறையில் மட்டுமின்றி கல்லூரி வளாகத்தின் பொதுயிடங்களிலும் இவ்வாறு மாணவர்கள் சேட்டை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இதனிடையில் ஆசிரியை அளித்த புகாரின் படி 3 மாணவர்கள் மற்றும் 1 மாணவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின் ஒருசில மணி நேரங்களிலேயே அவர்களை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.