ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டியது கட்டாயமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் இந்த தீர்ப்பு பெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்கள் பணியில் சேர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக இருந்தது.

2011 ஆகஸ்ட் 27க்கு முன் நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.