சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் பணிக்கு திரும்ப இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.