ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…. பணி காலம் நீட்டிப்பு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 1400தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 2009-2010 ஆம் கல்வி ஆண்டில் சுமார் 1400 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட்டது. அந்த தற்காலிக ஆசிரியர்களது பணியிடங்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது ஆசிரியர் பணியிடங்களுக்கான நீட்டிப்பு காலம் முடிவடைந்துள்ளதால், பணி நீட்டிப்பு உத்தரவை 2021 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் 2024 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *